jump to navigation

09 3, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
2 comments

இன்று ஒரு தகவல்

நாம் உபயோகப்படுத்தும் பணம் நோட்டுகளாக (Currency Notes) மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற நகரில் அச்சடிக்கப்படுகின்றது என நம் அனைவருக்கும் தெரியும் . எவ்வளவு பண நோட்டுகள் அச்சடிக்கப்படும்? அது நம் நாட்டின் பொருளாதார மதிப்பிற்கு சமமாக இருக்குமா? இல்லை.

இங்கு மட்டுமல்ல, உலகின் எந்த நாடுகளிலுமே பண நோட்டுகள் நாட்டின் பொருளாதார மதிப்பிற்கு சமமாக அச்சடிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு , 3,000 கோடிக்கு ஒரு குழுமத்தை விலைக்கு வாங்க வேண்டுமென்றால்,அதன் முழு மதிப்பிற்கும் பண  நோட்டுகள் உபயோகப்படுத்த படுவதில்லை. அதற்கு பதிலாக அரசு பத்திரங்கள் பயன்படுத்தப்படும். அரசு பத்திரங்களும் ரூபாய் நோட்டுகள் மாதிரிதான். மதிப்பு மட்டும் 1,000 மடங்குகளில் இருக்கும்.

நாம் அனைவரும் பங்கு சந்தை (Share Market) பற்றி கேள்விப்பட்டுள்ளோம், இதை தவிர வேறு உள்ளனவா?

ஆம் …. இதோ அவைகளில் சில …..

பணச் சந்தை (Money Market)
இந்த பணச் சந்தையில்தான் அரசு பத்திரங்கள் வாங்கி, விற்கப்படும். இதில் குறுகிய கால அடிப்படையில் ( 13 மாதங்கள் வரை) வணிகம் செய்யலாம்.

தட்பவெப்பநிலைக்கான சந்தை (Weather Market)
உலகிலேயே அதிக பணம் புழங்கும், மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே வணிகம் செய்யும் தனி உலகம் . எந்த அரசின் அங்கிகாரமுமின்றி  நடந்து வரும் சந்தை இது.

Advertisements

09 3, 2008

Posted by simba in News.
2 comments

சதுர்த்தி தினமான இன்  நன்னாளில்  நண்பர்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று வாழ்கை வசந்தமாக மாற எல்லாம் வல்ல விநாயக பெருமானை வணங்கி வழிபடுவோம்.


அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

09 2, 2008

Posted by simba in News.
2 comments

அலற வைக்கும் மின் தட்டுபாடு

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தை புரட்டிபோட்டிருக்கும் விஷயம் மின் தட்டுபாடு. இரவில் தூங்க முடியவில்லை , படிக்க தெருவிளக்கு  கூட இல்லாமல் அல்லாடும் குழந்தைகள் , செய்துவரும் தொழிலை எவ்வாறு நடத்தி செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கும் நிலையில் முதலாளிகள் , மனம் கவர்ந்த மகா தொடரை பார்க்க முடியாமல் மின்துறையை கரித்து கொட்டும் பெண்கள் இவ்வாறு அனைவரது சாபத்திற்கும் ஆளாகி இருக்கும் தமிழக அரசு தற்பொழுது சொல்லும் காரணம் போதிய மழை இல்லை காற்றாலை மின் உற்பத்தி குறைவு என்பதே.

ஆனால் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று சற்று உற்றுநோக்கினால் கிடைக்கும் தகவல்கள் நம்மை ஆச்சிரியப்பட வைக்கின்றன. மத்தியில் ஆளும் அரசு பணவீக்கம் உயர்ந்ததற்கு எப்படி சப்பை கட்டு கட்டியதோ அதே போல் தான் தற்பொழுது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டுக்கும்  சொல்கிறது.

நாட்டின் மொத்த தட்டுபாடு  தற்பொழுது 15% என்ற அளவில் உள்ளது. இதே தமிழகத்தை பொருத்த வரை மேலும் மோசமாகவே உள்ளது. அதிகரித்து வரும் பன்னாட்டு கம்பெனிகளின் முதலீடு குறைந்த கற்றாலை மின் உற்பத்தி , போன்றவற்றால் இப்பொழுது மொத்த தேவையில் 2,500mv அதிகரித்து உள்ளது.

தமிழக அரசின் ஒருசில கொள்கையால் இங்கு வரவேண்டிய பல காற்றாலைகள் வடஇந்தியாவை நோக்கி சென்றது, 2007 இல் செயலுக்கு வரவேண்டிய கூடான்குளம் அணுமின் உற்பத்தி 2009 வரை தள்ளி சென்றது , மேட்டூர் மற்றும் குந்தா விரிவாக்க திட்டங்கள் தள்ளிபோவது போன்ற பல காரணங்கள் இருந்தாலும் கடந்த பத்து வருட காலமாக மின் துறையில் சொல்லிக்கொள்ளும் படி எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

நிலைமை கைமிஞ்சி போவதற்குள் அரசு தகுந்த நடவடிக்கையில் இறங்காவிடில் நாம் இருளில் வாழ பழகிக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

09 2, 2008

Posted by simba in சமையல் குறிப்புகள்.
3 comments

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்


சுவையான பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

 1. பச்சரிசி மாவு       : 1/4 கிலோ
 2. சீனி           : 1/4 கிலோ
 3. தேங்காய் துருவியது   : 1/2 கப்
 4. ஏலக்காய்         : 3(பொடியாக்கியது)
 5. உப்பு தேவையான அளவு

செய்முறை:
முதலில் பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பின்னர் அவற்றை சிறு சிறு உருண்டைகளாக நீளவாக்கில் உள்ளங்கையில் வைத்து திரட்டிகொள்ளவும். அவற்றை இரண்டு சரி பாதியாக பிரித்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மூன்று தம்ளர் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு துண்டு கொழுக்கட்டையை போட்டு அது கரைகிறதா என்று பார்த்துக்கொள்ளவும். அது கரையவில்லை எனில் பின்னர் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டையின் ஒரு பாகத்தை, கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும். பின்னர் மீதி கொழுக்கட்டையையும் அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும். பின்னர் அது வெந்து விட்டதா என்று பார்க்க கையில் ஒரு துண்டை எடுத்து அழுத்தி பார்க்கவும். வெந்த பதம் வந்தவுடன் அதனுடன் சீனியை சேர்க்கவும். பின்னர் ஐந்து நிமிடம் கழித்து,கெட்டியாக வந்தவுடன் தேங்காய் துருவலையும், ஏலக்காய் பொடியையும் தூவி இறக்கி வைத்து விடவும்.

இப்போது சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

நன்றி :திருமதி. இராஜலக்ஷ்மி இராமசாமி – சென்னை

09 2, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
add a comment

சிஸ்டம் டிப்ஸ் ( தினமலர் – கம்ப்யூட்டர் மலர் )

திறந்திருக்கும் அனைத்து விண்டோக் களையும் மினிமைஸ் செய்திட மவுஸ் மூலம் ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திடலாம். மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் கீ + எம் (Windows key+M) கீகளை அழுத்தவும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் மினிமைஸ் செய்யப்படும்.

இவை அனைத்தையும் மீண்டும் பெற விண்டோஸ் கீ + ஷிப்ட் + எம் கீகளை (Windows key+Shift+M) அழுத்தவும். இந்த புரோகிராம் களை ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திட Alt+Space+N கீகளை அழுத்தவும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் மேக்ஸிமைஸ் செய்திட Alt+Space+X கீகளை அழுத்தவும்.

தேடல் தளங்கள்

http://www.dogpile.com/info.dogpl

http://www.excite.com

http://www.ask.com

http://www.lycos.com

http://www.alltheweb.com

http://www.search.looksmart.com

http://www.search.msn.com

08 30, 2008

Posted by simba in News.
2 comments

தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி

செப்டம்பர் 15 முதல் கிலோ அரிசி ரூ.1-க்கு நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 15 அன்று துவங்கும் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்று முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 180 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு 400 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மாலை நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அத்யாவசிய பொருட்களான பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் நியாய விலைக் கடைகளில் வழங்குவதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு ரூ.2-க்கு விற்கப்பட்ட கிலோ அரிசி இந்த ஆண்டு ரூ.1-க்கு விற்கப்படுவதாக முதல்வர் வெளியிட்ட இந்த அறிவிப்பு மக்கள் இடையே பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.

வீரத்திருமகள் 08 29, 2008

Posted by simba in News.
add a comment

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மாயாவதி!

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்’ பட்டியலில் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 6வது இடத்தைப் பிடித்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தற்போது 21வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. உலக முழுவதிலுமுள்ள பிரபலமான பெண்களின் பொதுசேவை, மக்கள் செல்வாக்கு, சாதனைகள், பொது வாழ்வில் அவர்களது பங்கு, மீடியா செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான 100 பேர் கொண்ட பட்டியலை, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இந்த ஆண்டும் 3வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2வது இடத்தில் அமெரிக்காவின் பெடரல் காப்பீடு நிறுவன தலைவர் ஷீலா பய்ரும், 3வது இடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான இந்திரா நூயியும் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தற்போது 21வது இடத்தில் பின்தங்கியுள்ளார். இந்த பட்டியலில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ், முதல் 10 பெண்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளார். ஹிலாரி கிளின்டன் 28ம் இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் ஆச்சரியமளிக்கும் விதமாக உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி இடம் பெற்றுள்ளார். 59வது இடத்தில் உள்ள மாயாவதி பற்றி ‘போர்ப்ஸ்’ பத்திரிகையில், “இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் இருக்கும் முக்கியத் தலைவர் இவர். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர், உயர் வகுப்பினரை கூட்டணி சேர்த்து உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளார்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக இவரது கட்சி வாக்களித்தது. மக்கள் செல்வாக்கு பெற்ற சக்தி வாய்ந்த தலைவர் இவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

08 28, 2008

Posted by simba in News.
add a comment

புதுச்சேரி புதிய முதல்வராக வைத்தியலிங்கம் தேர்வு

புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி இன்று பதவி விலகிய நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வராக     வைத்தியலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. ரங்கசாமிக்கு எதிராக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி ஆரம்பித்தனர். ரங்கசாமியை மாற்றும்படி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர்.

இதன் காரணமாக, தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ரங்கசாமிக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ரங்கசாமிக்கு எதிராக இருந்ததால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால், முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி இன்று விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஆளுனர் கோவித் சிங் குர்ஷரிடம் வழங்கினார்.

.

சிங்கூர் நானோ கார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மிரட்டல்

மேற்கு வங்கம் சிங்கூரில் இருக்கும் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை முன்பு கடந்த 24 ம் தேதியில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் இன்று அங்குள்ள தொழிலாளர்கள் மிரட்டப்பட்டதாக தெரிகிறது. இதனால் அனேகமாக அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் டாடா மோட்டார்ஸ் ஊழியர்கள் மிரட்டப்பட்டதால் அதில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தவர்கள் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே வந்திருந்தனர். எனவே இன்று உற்பத்தி அனேகமாக நிறுத்தப்பட்டு விட்டது என்று சொல்கிறார்கள்.

நானோ கார் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்திற்கு முகேஷ் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது

பெரியகலையம்புத்தூர் வள்ளுவர் தெருவில் திருவள்ளுவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கோயில் கட்டப்பட்டுள்ளது. 10 மாதங்களுக்கு முன் இந்த கோயிலின் கட்டுமான பணிகள் துவங்கியது . இங்கு 4.5 அடி உயரமுள்ள கல்லால் ஆன திருவள்ளுவர் சிலை ஸ்தாபிக்கப்பட உள்ளது.ஒரு அடி உயரத்தில் பீடம் உள்ளது. வரும் 30ம் தேதி காலை 5 மணிக்குமேல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

08 28, 2008

Posted by simba in News.
add a comment

தொடரை வென்றது இந்தியா

இந்தியா-இலங்கையிடையேயான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்தியா, 49.4 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 258 ரன் எடுத்தது. 259 ரன் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212ரன் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி உள்ளது.

இன்றைய சுவையான செய்திகள் 08 27, 2008

Posted by simba in News.
3 comments

முதல்வராகிறார் சிபு சோரன் இன்று பதவியேற்கிறார்

ஜார்க்கண்ட் முதல்வராக தான் நினைத்தபடி சிபு சோரன் இன்று பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் முதல்வராவதற்கு, மதுகோடா ஆதரவு தெரிவித்ததை அடுத்து, ஜார்க்கண்ட் மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பரபரப்பும், குழப்பமும் முடிவுக்கு வந்துள்ளது. பெரும்பான் மைக்கு தேவையான 42 MLA,க்களின் பட்டியலை சிபு சோரன், கவர்னர் சையது சிப்தே ரசியிடம் நேற்று முன்தினம் அளித்தார்.

இதற்குமுன்  2005ல் முதல்வராக பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத தால், ஒன்பது நாட்கள் மட்டுமே அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடிந்தது.

இந்தியா-இலங்கை 4-வது ஒருநாள் கிரிக்கெட் இன்று துவக்கம்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.ஏற்கனவே முடிவடைந்துள்ள 3 போட்டிகளில் 2-ல் இந்திய அணியும்,ஒன்றில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கோப்பையை கைப்பற்றும் அணியை நிர்ணயிக்கும் 4-வது போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இப்போட்டி இன்று மீண்டும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்கும் அபாயத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குஸ்டவ் என்ற புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வந்த தகவலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற ஜார்ஜியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் நடந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வதாக சொல்கிறார்கள். நியுயார்க் சந்தையில் நேற்று அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( அக்டோபர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 67 சென்ட் உயர்ந்து 116.94 டாலராக இருந்தது.

Adults Only காட்சிகளை ஒளிபரப்ப டிவி சேனல்கள் ஆர்வம்

வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் வகையிலான காட்சிகளை, இரவு நேரங்களில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசை “டிவி’ சேனல்கள் கேட்டுக் கொண்டுள்ளன.தனியார் தொலைக்காட்சி சேனல்களை உறுப்பினர்களாக கொண்ட, “இந்தியன் பிராட்காஸ்டிங் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத் திடம் கோரிக்கை.