jump to navigation

விவாத மேடை 09 6, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
5 comments

நண்பர்களே

இந்த கட்டுரைக்கு நான் எதிர்பார்த்த அளவுக்கு மேலும் கருத்துகள் வந்துள்ளதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். திரு. சாய் சார் அவர்கள் பின்னூட்டத்தில் மட்டும் அல்லாது தனிப்பட்ட முறையிலும் வாழ்த்தியது எனக்கு உற்சாகத்தை அளித்திட்டது. திரு.ராம் இக்கட்டுரையை புதிய கண்ணோட்டத்தில் அணுகியுள்ளார். அதற்கு இந்த கட்டுரையை நமக்காக அளித்த திரு. அமுதன் தந்த விளக்கங்கள் என்று, அனைத்தும் இந்த வலைத்தளத்தின் நோக்கம் ஈடேருவதாக உணர்த்துகிறது.

ஏமாறுகிறவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மருந்துக்கடை, துணிக்கடை, ஏன் திரைஅரங்கினுள் விற்கப்படும் குளிர்பானம் என இன்னும் பலவற்றில் தெரிந்தே ஏமாறுகிறோம். ஆனால் தள்ளுவண்டிக்காரரிடம், பூ விற்கும் பெண்களிடம், பழைய பொருட்கள் வாங்குவோரிடம் என பிழைப்பிற்கு  தொழில்  செய்யும் இவர்களிடம் ஒன்று, இரண்டு ரூபாய்க்காக மணிக்கணக்கில் பேரம் பேசுகிறோம். இது தான் நமது உலகம், இது இப்படித்தான் இருக்கும்.  இங்கு நல்லவர்கள் மதிக்கப்படுவதில்லை. நமது அடிப்படை வாழ்கையின் எதோ ஒரு ஓரத்தில் தவறு இருக்கிறது. இவ்வாறான கட்டுரைகள் இங்கே வளையற்றுவத்தின் நோக்கம் மற்றவர்களை குறை கூற அல்ல. நம்மை நாம் திருத்திக்கொண்டு, எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதற்கே.

இதை போல் மேலும் பல கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன். மேலும் பின்னுட்டத்தின் மூலம் என்னை உற்சாகப்படுத்தும் அரா, நவீன், கனகவேல், சக்தி என அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

Advertisements

தகதகக்கும் தங்கம் – சில உண்மைகள் 09 5, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
47 comments

தங்கநகை வாங்குவோர் கவனத்திற்கு

நமது வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று தங்கம் என்ற உலோகம். அரசன் ஆனாலும் சரி ஆண்டி ஆனாலும் சரி, கடுகளவாவது தங்கம் இல்லாமல் வாழ்வதில்லை.  இந்த அளவு மதிப்பு வாய்ந்த உலோகத்தை வாங்கும் பொழுது இன்று வரை யாரும் முழுமனதுடன் வாங்குவதில்லை. காரணம் தம்மை ஏமாற்றியிருபார்களோ என்ற உணர்வு.

உண்மை … சாமானியர்கள் இன்றுவரை ஏமாற்றப்படுள்ளர்கள்,, அல்லது ஏமாந்துள்ளர்கள்,,  தங்கத்தின் எடையில் அல்ல தரத்தில். இதை தவிர்க்க வழியே இல்லையா. இந்த தொழில் செய்வோர் அனைவரும் இப்படிதானா. கண்டிப்பாக இல்லை.

நகை தொழிலும் பல நல்ல வியாபாரிகள் உள்ளனர். என்ன ஒன்று நல்லவர்கள் விளம்பரப்படுதப்படுவதில்லை. ஆகையால் இங்கே சில கோட்டான்கள் குதித்து விளையாடிக்கொண்டிருகிறார்கள், ஏமாந்தவர்களின் இதயத்தில் ஏறி.

இதற்கான ஒரு சிறு விழிப்புணர்வு முயற்சியே தொடர்ந்து வரும் கட்டுரை. இந்த இடத்தில் இந்த கட்டுரையை எழுதிய நண்பர் திரு.தமிழ் அமுதன் பற்றி குறுப்பிட்டே ஆகா வேண்டும். இவர் தங்க பட்டறை நடத்தி வருகிறார். தனது தொழிலின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக இந்த கட்டுரையை எனது வேண்டுகோளுக்கிணங்க, நமது வலைத்தளத்தில் இடுவதர்க்காக அனுபியுள்ளார். அவரது வேலைகளுக்கு இடையில் சிரமம் பாராமல் அவர் செய்த இந்த உதவிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இனி தங்கம் என்ற உலோகத்தின் உலகத்திற்கு செல்வோம்…

91.6  ……  ஒரு விளக்கம்

91.6 என்பது ஒரு கிராம் ஆபரண தங்கத்தில்  91.6%   சுத்தமான  24  கேரட்  தங்கம் .  மீதி  8.4  சதவீதம்  செம்பு ,மற்றும்  வெள்ளி  ஆகும். 91.6   தங்கம்தான்  22 கேரட்  தங்கம் .

KDM   என்றால்  என்ன ?

முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று  ஒரு கலவையை  பயன் படுத்துவார்கள் . (தங்கம் + வெள்ளி +செம்பு )  இந்த மூன்றும் சேர்ந்ததுதான் பொடி .  இந்த  பொடியை பயன்படுத்தி  நகை பற்றவைக்கும் போது  பொடியில் உள்ள செம்பு , மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன்  சேர்ந்து விடும்  அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும் . ஆனால் KDM வந்த பிறகு அந்த பிரச்சனை  இல்லை . ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் KDM சேர்த்தால்  போதும். பற்றவைக்க இதனை பயன் படுத்தலாம் .பற்றவைக்கும் போது  ஏற்படும் வெப்பத்தில் KDM மட்டும்  தீய்ந்து  போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும்  நகையில் இருக்கும் .

செய்கூலி சேதாரம்

தற்போது கூலி இல்லை ,சேதம் இல்லை என விளம்பரங்கள் வருகின்றன .ஆனால் கூலி இல்லாமல் சேதம் இல்லாமல் தரமான 91.6 kdm நகையை கொடுக்க முடியாது. உதாரணமாக  கல் வைத்த மோதிரம் ஒரு நகை பட்டறையில் எப்படி தயாராகிறது என்று பார்ப்போம்.

  • 1. முதலில் சுத்தமான 24 கேரட் தங்கம், செம்பு மற்றும் வெள்ளி சேர்த்து , 22 கேரட் ஆபரண தங்கமாக மாற்ற படுகிறது
  • 2. மோதிரம்  முதலில் மோல்டிங்  செய்யப்படுகிறது . மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும்  சேதம் கொடுக்க படுகிறது.
  • 3. பின்னர் அளவு தட்டி, ராவி  சுத்தம்  செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் , ராவும் போதும்  சேதம் ஏற்படும் .
  • 4. அடுத்து மோதிரம் பம்பிங்  முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும்.
  • 5. பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க, செதுக்க , நகை செய்பவரால் கூலி ,மற்றும்  சேதம்  கொடுக்க படுகிறது.
  • 6. பின்னர்  நீர் மெருகு போடப்பட்டு  மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.

இப்படி  ஒரு மோதிரம் செய்ய  இவ்வளவு  வேலை இருக்கும் போது  கூலி இல்லாமல் ,சேதம் இல்லாமல்  தரமான       916   KDM   நகை எப்படி கொடுக்க முடியும் .  அப்படியே  கொடுத்தாலும் வேறுவகையில் பிடுங்கி விடுவார்கள்.

ஒரு நகை செய்ய நகையின் தன்மைக்கு ஏற்ப  மூன்று முதல் எட்டு  சதவீதம் வரை  நகை செய்பவருக்கு கொடுக்கப்படுகிறது . இடைத்தரகர்  மூலம்  (  இடைத்தரகருக்கு கமிசன் போக )  மொத்த  வியாபாரிக்கு செல்கிறது . பிறகு  (மொத்த வியாபாரிக்கு கமிசன் போக ) நகை கடைக்கு செல்கிறது . மக்கள் நகை வாங்க செல்லும் போது இடைதரகர் கமிசன் ,மொத்த வியாபாரி கமிசன் எல்லாம்  மக்கள் தலையில் சுமத்தப்படுகிறது.

நகை  வாங்கும்  போது

91.6  KDM    மட்டும்  வாங்கணும்

ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை  ஆயிரம் ரூபாய் எனில் , கூலி  சேதம் வேறு  எல்லாம் சேர்த்து  15 முதல் 20  சதவீதம் அதிகம் கொடுத்து வாங்கினால் அதுவே அதிகம்.

இப்போது  சென்னை, கோவை, மதுரை  போன்ற நகரங்களில்  மக்கள் நேரடியாக தங்கள் நகைகளை வெறும் 25 ரூபாய்  செலவில் தர சோதனை செய்து கொள்ளலாம்.

மிகவும் தரம் உள்ள நகைக்கு  மட்டுமே ஹால் மார்க் போடுவார்கள் .  ஹால் மார்க் என்பது தரத்திற்கான சான்று . ஹால்  மார்க் முத்திரை இடும் நிறுவனம் துவங்க லட்ச கணக்கில் செலவுஆகும்.  ஹால் மார்க் என்றால் 22CT  மட்டும் அல்ல 14CT  ஹால் மார்க் 18CT   ஹால் மார்க்  அப்படி  உள்ளது. மிக மிக சிறிய அளவில் தரம் குறைந்தாலும் ஹால் மார்க்  முத்திரை கிடைக்காது.

22CTகீழ்  உள்ள நகை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் .

ஆனால்14CT,18CT  ஹால் மார்க் முத்திரை பெற்று அதற்குரிய  விலை வாங்கி கொண்டு விற்பனை  செய்யலாம்.

சிறு குறிப்பு:

KDM என்று  சொல்வது  முதலில் தவறு.  CADMIUM என்பதை கேடியம் என சொல்லி KDM  என்று ஆகி விட்டது.

நண்பர்களே நகை வாங்கும் விசயத்தில் ஏமாந்த அப்பாவிகளில் நானும் ஒருவன். கடைசியாக நான் நகை வாங்கியபொழுது எனக்கு திரு. பாலா  மிகவும் உதவியாக இருந்தார். அவரும் ஒரு நகை பட்டறை நடத்தி வருகிறார். எனவே இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் கண்டிப்பாக பின்னுட்டமிட வேண்டுகிறேன். மேலும் இங்கு குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தவிர வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் நமது வலைத்தளத்தில் குறிப்பிடவும் அல்லது நமது நண்பர்கள் தமிழ் அமுதன் , பாலா இவர்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

09 4, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
6 comments

நன்றி நன்றி நன்றி

இன்று வரை இந்த வலைத்தளத்தை பார்வையிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.  இதில் பின்னோடமிட்ட பாலா, ராஜி அக்கா, வீனா , ராம் , நவீன் , அரா, தமிழ் அமுதன் ,  F&O புலி திரு. சாய் கணேஷ் சார்  , மற்றும் இதற்கு உந்துசக்தியாக இருந்த குரு திரு.சரவணன் என அனைவரையும் நான் பணிவுடன் வணங்குகிறேன்.

இந்த வலைத்தளத்தை நான் உருவாக்க காரணம் இதில் எனது கருத்துகளை மட்டும் வலையேற்ற அல்ல. இந்த வலைத்தளத்தை பார்வையிடும் அனைவரின் பங்களிப்பும் இதில் இடம்பெறவேண்டும் என்ற எண்ணத்தினால்தான். எனவே உங்கள் அனைவரையும் இதில் பங்கெடுக்க மீண்டும் அழைக்கிறேன்.

இந்த ஆதரவு என்றும் தொடர வேண்டும். நன்றி.

09 3, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
2 comments

இன்று ஒரு தகவல்

நாம் உபயோகப்படுத்தும் பணம் நோட்டுகளாக (Currency Notes) மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற நகரில் அச்சடிக்கப்படுகின்றது என நம் அனைவருக்கும் தெரியும் . எவ்வளவு பண நோட்டுகள் அச்சடிக்கப்படும்? அது நம் நாட்டின் பொருளாதார மதிப்பிற்கு சமமாக இருக்குமா? இல்லை.

இங்கு மட்டுமல்ல, உலகின் எந்த நாடுகளிலுமே பண நோட்டுகள் நாட்டின் பொருளாதார மதிப்பிற்கு சமமாக அச்சடிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு , 3,000 கோடிக்கு ஒரு குழுமத்தை விலைக்கு வாங்க வேண்டுமென்றால்,அதன் முழு மதிப்பிற்கும் பண  நோட்டுகள் உபயோகப்படுத்த படுவதில்லை. அதற்கு பதிலாக அரசு பத்திரங்கள் பயன்படுத்தப்படும். அரசு பத்திரங்களும் ரூபாய் நோட்டுகள் மாதிரிதான். மதிப்பு மட்டும் 1,000 மடங்குகளில் இருக்கும்.

நாம் அனைவரும் பங்கு சந்தை (Share Market) பற்றி கேள்விப்பட்டுள்ளோம், இதை தவிர வேறு உள்ளனவா?

ஆம் …. இதோ அவைகளில் சில …..

பணச் சந்தை (Money Market)
இந்த பணச் சந்தையில்தான் அரசு பத்திரங்கள் வாங்கி, விற்கப்படும். இதில் குறுகிய கால அடிப்படையில் ( 13 மாதங்கள் வரை) வணிகம் செய்யலாம்.

தட்பவெப்பநிலைக்கான சந்தை (Weather Market)
உலகிலேயே அதிக பணம் புழங்கும், மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே வணிகம் செய்யும் தனி உலகம் . எந்த அரசின் அங்கிகாரமுமின்றி  நடந்து வரும் சந்தை இது.

09 2, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
add a comment

சிஸ்டம் டிப்ஸ் ( தினமலர் – கம்ப்யூட்டர் மலர் )

திறந்திருக்கும் அனைத்து விண்டோக் களையும் மினிமைஸ் செய்திட மவுஸ் மூலம் ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திடலாம். மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் கீ + எம் (Windows key+M) கீகளை அழுத்தவும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் மினிமைஸ் செய்யப்படும்.

இவை அனைத்தையும் மீண்டும் பெற விண்டோஸ் கீ + ஷிப்ட் + எம் கீகளை (Windows key+Shift+M) அழுத்தவும். இந்த புரோகிராம் களை ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திட Alt+Space+N கீகளை அழுத்தவும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் மேக்ஸிமைஸ் செய்திட Alt+Space+X கீகளை அழுத்தவும்.

தேடல் தளங்கள்

http://www.dogpile.com/info.dogpl

http://www.excite.com

http://www.ask.com

http://www.lycos.com

http://www.alltheweb.com

http://www.search.looksmart.com

http://www.search.msn.com