jump to navigation

என்ன கைம்மாறு செய்வேன் 09 10, 2008

Posted by simba in அனுபவங்கள்.
2 comments

நன்றி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது, இன்று நான் அடைந்த ஆனந்தத்திற்கு, அந்த ஒருவார்த்தை மட்டும் போதாதது, மௌனம் மட்டுமே இதற்கு என்னால் முடிந்த கைம்மாறு.  ஒரு மாணவனுக்கு தனது குருவின் பாராட்டே மிகப்பெரிய வாழ்த்து.  ஆகையால் திரு.சரவணன் சார் அவர்களின் மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு தான் பெருமை.

அவரது பங்குவணிகம் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த காரணத்தால் மிக அதிகமான பார்வையாளர்கள், பின்னூடங்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் திரு.பஷீர் அவர்கள் கேட்டுள்ள கேள்விக்கு திரு.அமுதன் பதில் அளித்துள்ளார். படித்துப்பார்த்து விட்டு தங்களது கருத்தை கூறவும்.

Advertisements

யாருகிட்ட சொல்லி அழ 09 9, 2008

Posted by simba in அனுபவங்கள்.
2 comments

ஜனவரி 2008 நினைவுகள்

அண்ணே இது கட்டுரை இல்லீங்கோ, நம்ம சொந்த அனுபவம்.  அவரசமா சம்பாதிக்க ஆசைப்பட்டு , அடி இல்ல இடி வாங்கிய பல பேர் ல நானும் ஒருத்தன். (வேற எதுல பங்கு சந்தைல தான்). எப்படி இது நடந்துது என்பதை பலபேர் சொல்லிருக்காங்க. இதுக்கு மேல இவன் புதுசா என்ன சொல்லிட போறான், என்று நீங்க சொல்வது எனக்கு கொஞ்சம் சத்தமாவே  கேட்கிறது. ஆனாலும் ஏதாவது சொல்லியே ஆகணும். தலைப்பு வச்சாச்சு, இன்று சந்தை நிலவரம் வேற சரி இல்ல, அப்போ சரிவிற்கு பின் ஏற்பட்ட நிகழ்வுகள் சொல்லலாமே என்று இதை எழுதுகிறேன்.

என்னமோ சொல்லானும் நு ஆசை பட்டுடான், விடமாட்டன் போல என்று எனக்கு அர்ச்சனை செய்து கொண்டே இதை படிப்பவர்களுக்கும் எனது நன்றி.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சரிவிற்கு பின் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடினோம்,(வேற எதுக்கு துக்கம் விசாரிக்கத்தான்) நண்பரின் அலுவலக அறைக்குள் செல்லும் பொழுது எனக்கு முன்னரே அங்கு அனைவரும் ஆஜர்.

நான் தான் லேட் போல என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றேன். “வாப்பா இப்பதான் ஒரு joker குறைதுனு  சொல்லிகிடேருந்தேன்  உடனே வந்துட்ட”  என்றவாறே அன்பு நெஞ்சங்கள் என்னை வரவேற்றன. நானும் விடாமல் என்ன தங்கம் தேய்மானம் அதிகமா என்று கேட்டு  எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தேன்.

அட நீ வேற இப்போதைக்கு கொவனமாது மிச்சம் இருக்கு. இன்னும் ரெண்டு நாள் சேந்து இருந்த அநேகமா இந்த தங்கத்த அடகு கடைல தான் பார்த்திருப்ப என்றார் தங்கம்.
அவர் சொல்வதை கேட்டவாறே அந்த இடத்தை பார்வையிட்டால், அட நம்ம வக்கீலு,  விடுவோமா,  
என்ன வக்கீல் அண்ணே shave பண்ண கூட நேரம் இல்லாம share market ல கலக்குறீங்க போல…
அதற்க்கு அவர் , வாடா நீதான் பாக்கி, ஒழுங்கா மாசம் நாலு drink and drive பார்த்தமா பொழப்ப ஒட்டுனமா நு இருந்தேன். இப்ப சந்தோசமா. சவர கடைல போய் பண்ற வேலைய, கத்தி இல்லாம computer முன்னாடி உக்காந்து பண்ணிடீங்க. நல்ல இருங்கடா நல்லா இருங்க. என்று என்னை விழுங்குவது போல் ஒரு பார்வை பார்த்து தனது வெண்குழலில் லயித்தார்.

நீங்க ஒன்னும் தப்பா  எடுத்துகாதீங்க, நல்ல மனுஷன் தான் பாவம்… சரி உங்களுக்கு நம்ம மீசையை அறிமுகப்படுத்தறேன், கண்டிப்பா அவன் மாட்டியிருக்க மாட்டான், ஆமா மீசை எங்க தங்கம். ஆளையே காணோம்….

தங்கம்: அவரு ஒரு ball ல 6 sixer அடுச்ச களைப்புல பக்கத்து ரூம் ல தூங்கிட்டு இருக்கார்.  அநேகமா bat இன்னும் கைல தான் இருக்கும், உள்ள போறதுனா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா போ, என்று சொன்னார்.  இதுக்கு மேல உள்ள போக நான் என்ன முட்டாளா…

அப்பொழுது தான் யாரோ ஒருவரின் அழுகுரல் என்னை உசுப்பியது…. நம்ம வேலையை வேற யாரோ பண்றாங்களே, யார் அது என்று பார்த்தால், நம்ம வீட்டோட மாப்பிளை.

பக்கத்துல போய் தலையை உயர்திப்பார்தால்,  வீங்கிய கன்னம் வாடியமுகம். எனக்கு ஒரே குழப்பம், என்னடா மாப்ள இப்படி இருக்க என்று நான் கேட்டதுதான் தாமதம், எங்கு வைத்திருந்தானோ அவ்வளவு கண்ணீரை, ஓ வென்று அழுதுவிட்டான்.

நண்பா உனக்கே தெரியும், நான் என் பொண்டாட்டி வீட்ல தான் இருக்கேன். அவங்க வீட்ல குடுத்த பணத்த வச்சு தான் பைனான்ஸ்  வச்சேன். அதுல இருந்த பணத்த எடுத்துதான் market ல போட்டேன்.  இது எல்லாம் அவங்களுக்கு தெரியும். (மூச்சு வாங்கினான்)

சரி மேல சொல்லு என்றேன்…

லாபம் வந்தபெல்லாம் ஒன்னும் சொல்ல, ஆனா இப்போ நஷ்டம் ஆய்டுச்சு நு சொன்னேன். அவ்ளோதான் மருமகன் நு கூட பார்க்காம,(இந்த இடத்தில் வன்முறை கருதி சென்சார் செய்யப்படுகிறது) எத்தன பேர்னு கூட தெரியல. ஆனா அத பத்தி நான் கவலப்படுல, கடைசீயா பொண்டாட்டியும் சேர்ந்து அடுசிட்டாட மாப்ள… என்று மறுபடி
அழ ஆரம்பித்தான்.

இப்போ சொல்லுங்க, இந்த நிலைமையில் என்னோட கஷ்டத்த யாருகிட்ட சொல்லி அழ?