jump to navigation

பாதை மாறிய நதி 09 7, 2008

Posted by simba in News.
trackback

ஒரு உண்மை சம்பவம்

என்னடா இவன் பீடிகை பலமா போடுகிறானே என்று யாரும் அச்சப்பட வேண்டாம்.  நான் இரண்டு நாட்களுக்கு முன் எனது பள்ளி தோழனை சந்திக்க நேர்ந்தது. “அவனாட நீ” என்று ஆச்சிரியப்பட வைத்தது அவனிடம் இருந்து பெறப்பட்ட செய்திகள். இப்படி எல்லாம் நடக்குமா, என்று எண்ணிய பல விசயங்களை, இப்படித்தான் நடக்கும் என்று உணர்த்தியது அவன் கூறிய உண்மைகள். இதை படிக்க குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும். ஆகையால் நேரம் இருக்கும் நண்பர்கள் மேலே படிக்கவும்.

பள்ளி நாட்கள்:

இவனை பற்றி சொல்வதற்கு குறைந்தது பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தாவது நான் ஆரம்பிக்க வேண்டும். ஆம் 12 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இருவரும் ஒரே வகுப்பறையில் (படித்தோமா என்பது வேற விஷயம்) பயின்ற மாணவர்கள்.  நண்பனுக்கு சதுரங்க ஆட்டம் என்றால் உயிர். மிகவும் நேர்த்தியாக விளையாடுவான். ஆனால் பாடங்களை கற்பதில் சிறிது ஆர்வம் குறைவு. He is an Outstanding Person. ஆகையால் அவன் மைதானத்திலும், இன்னும் மேலாக பள்ளியை விட்டே விலகியிருந்த  காலங்களே அதிகம். எனவே அங்கு பயின்ற அத்தனை மாணவர்களுக்கும் அவன் தெரிந்த முகமானான்.

ஒரு முறை விடுமுறை நாளில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் திரைப்படத்திற்கு சென்றனர். அடிப்பொடி வேலைக்கு நானும் என்னுடன் சேர்ந்து சில மாணவர்களும் அவர்களுடன் சென்றோம். அதில் நமது நண்பனும் ஒருவன்.  திரை அரங்கில் ஏற்ப்பட்ட ஒரு கசப்பான நிகழ்ச்சியால், கோபமடைந்த நமது நண்பன், இதற்க்கு காரணமான ஒருவனின் கபாலத்தில் கோலி ஆடிவிட்டன். (அவனை தடுக்க சென்ற எனக்கு அவனை காட்டிலும் அதிகான அடி என்பது வேறு).  இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் பள்ளிக்கு கெட்ட பேர் என்று அந்த முழு பூசினியை மறைத்து விட்டார்கள்.  இதன் மூலம் நமது நண்பனுக்கு பள்ளியில் வேறு பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அது அவனது உதவும் குணம். படிப்பு மட்டும் தான் சரியில்லையே தவிர வேறு எந்த குறையும் சொல்ல முடியாது.

வருடங்கள் கழிந்தன.  பத்தாம் வகுப்பு தேர்வில் கோட்டை விட்ட நண்பனை ஒரு two wheeler work shop இல் வேலைக்கு சேர்த்துவிட்டார் அவரது தந்தை.  ஆறு மாதங்களில் தொழிலை கற்றுக்கொண்டு புதிததாக ஒரு கடையை திறந்தான். அதுவரை மைதானத்தில் சுற்றிய நாங்கள் அவனது கடையில் முகாமிட ஆரம்பித்தோம். chess , carom என விடுமுறை நாட்களில் களைகட்டும். வாகன பழுது நீக்கும் இடம் என்பதால் பலபேருடைய நடப்பு அவனுக்கு கிடைத்தது. ஆனால் அவனது மனம் பழுதடைந்தது.

நண்பனுக்காக:

சில நாட்களில் நண்பனின் தொடர்பு விட்டுப்போனது. வேலை தேடி நான் வேறு ஊருக்கு வந்ததால் பல வருடம் கழித்து அவனை சந்தித்தேன். இனி வருவன யாவும் அவன் சொல்லி நான் தெரிந்துகொண்டது.

நாட்கள் போக போக அவனுக்கென்று ஒரு இடத்தை இந்த சமூகத்தில் உறுதி செய்து கொண்டான். இந்நிலையில் நட்பு வட்டத்துக்குள் இருந்த ஒருவனுக்கு காதல் அரும்பியது. சில நாட்களில் அது இருதலைக்காதல் ஆனது. இதற்கு உதவியது நம்ம நண்பன் தான். ( love ku help pannatha friends aa).  தனது காதலியை கைபிடிக்க நண்பனிடம் உதவி கோரப்பட்டது. அந்த பெண்ணோ மிகவும் பெரிய இடத்துப்பெண். (இங்க தான் ட்விஸ்ட் ங்கோ)

அவனது நண்பனுக்கு காதலி வேண்டும், தனக்கு பேர் வேண்டும் என்று யோசித்த நண்பன், (இவனது வாடிக்கையாளர்களில் ஏட்டும் ஒருவர். ஒருமுறை விசாரணைக்காக ஒருவனை கூடிச்சென்று, மீண்டும் விசாரணை முடித்து கையுடன் அழைத்து வந்துள்ளார். இதை பற்றி நண்பன் அவரிடம் கேட்ட பொழுது ” முன்ன ஒரு தடவ இப்படித்தான் ஒருத்தன விசாரிச்சு அனுப்பினோம். அவன் வீட்டுக்கு போகம பொய் தற்கொல பண்ணிக்கிட்டான். ஏகப்பட்ட பஞ்சாயத்து ஆய்ருச்சு. அதான் யாரு ஒருத்தன கூட்டிட்டு வர்றமோ அவங்களே மறுபடி கொண்டுபோய் வீட்ல விட்டுட்டு வருவோம் ” என்று கூறியுள்ளார்.) இந்த பிரச்சனையை தனக்கு சாதகமாக்கி கொள்ள எண்ணி , தனது நண்பனிடம் சென்று ” உன் காதலியில் அப்பாவிடம் சென்று நேரடியாக பெண் கேளு. வருவதை நான் பார்த்துகொள்கிறேன், என்று கூறியுள்ளான். இவனின் சொல்படி நடந்த நண்பன் மறுநாள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டான்.

மாறிய பாதை:

பொதுவாக அங்கு உள்ள காவல்நிலையங்களில் காவலாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். எனவே மாலை வரை நண்பனின் நண்பரிடம் விசாரணை நடந்த பிறகு உணவு அளிப்பதற்காக உக்காரவைக்கப்பட்ட நேரத்தில் ஆள் பறந்து விட்டார். (பிறகு தான் தெரிந்தது இது அனைத்தும் நண்பனின் idea என்று). ஒரு பாதுகாப்பான இடத்தில் அவரை வைத்தபின் , நண்பர் உடனடியாக மறைத்து இருப்பவரின் பெற்றோரிடம் சென்று அவரை பற்றி தெரியாது போல் விசாரித்துள்ளார். அவர்களும் நடந்ததை கூறியுள்ளனர். ஆனால் எதற்கு காவல் நிலையம் கொண்டு சென்றனர் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.

இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த நண்பன் ” இதுக்கு லவ் மேட்டர் தான் காரணம். பொண்ணு பெரிய இடத்து பொண்ணு.  போலீஸ் இவன என்ன வேன்னளும் பண்ணலாம். நாம சீக்கிரம் போய் காப்பாத்தனும் ” என்று கூறி தன்னுடன் ஒரு கூட்டத்தை கூடிக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளான். அங்கு உடனடியாக தமது நண்பரை காட்டுங்கள் என்று கூச்சளிட்டுள்ளார். மேலும் நண்பரை கொன்றிருக்கலாம் என்றும் செய்தியை கசியவிட்டுள்ளான். அன்று இரவே “நண்பரின் மறைவிற்கு கண்ணேர் அஞ்சலி, இதற்கு காரணமான காவல்துறையை சேர்ந்தவர்கள் மீதும் அந்த பெண்ணின் தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போஸ்டர் ஒட்டியுள்ளான்.

அன்றே இந்த பிரச்சனை பொது பிரச்சனை ஆனது. நண்பனின் தலைமையில் கூட்டம் சேர்ந்து கொண்டே போனது. சம்பவம் நடந்த இரண்டாம் நாள் பெண்ணின் தந்தைக்கு ஒரு மர்ம அழைப்பு. அதில் விசாரணைக்காக அழைத்து வந்த பையன் எங்களிடம் உள்ளான். அவனுக்கு உனது மகளை திருமணன் செய்து வைக்க வேண்டும். மேலும் எங்களுக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும். இன்னும் ஒரு மணி நேரத்தில் இது நடக்கவில்லை என்றால் பையனை கொன்று பழியை உன்மீது சுமத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.  முடிவாக தனது நண்பனுக்கு அவர் காதலித்த பெண்ணை திருமணன் செய்து வைத்து, தனக்கு பேரும், பணமும் சேர்த்துக்கொண்டன்..

இந்த பிரச்சனையில் தனக்கு ஒரு கட்சியின் அறிமுகம் கிடைத்தது என்றும், பின்னாளில் அதே காட்சியில், தனக்கு ஒரு பதவி தந்தார்கள் என்றும் கூறினான். அதான் பிறகு பலவித கட்டப்பஞ்சயதுகள் இவனிடம் வந்ததாம். (போலீஸ் ச வே எதிர்த்தவன்) என்று ஒரு பட்டம். நாளுக்கு நாள் இவனை நாடி வந்த கூட்டமும் அதிகரித்து.  அந்த காட்சியில் அவனது பதவியும் அதிகரித்து. இப்போ தான் மாவட்ட அளவிலான ஒரு பதவியில் இருப்பதாகவும், ஓரளவு நல்ல சொத்து சேர்ந்துள்ளதாகவும் கூறினான். இத்தனைக்கும் அவனுக்கு 27 வயது தான் ஆகிறது.

நண்பர்களே இவ்வளவு நீண்ட கட்டுரையை இங்கு வெளியிட்ட காரணம் , இப்படியும் ஒரு மனிதன் மாற்றப்படுகிறான் அல்லது மாறுகிறான். இது யாருடைய தவறு. இன்று வரை அவன் என்னை மறக்கவில்லை. சதுரங்கதையும் மறக்கவில்லை. இருவரது தனிப்பட்ட வாழ்கையை மறந்து வெகு நேரம் சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தோம். என்னதான் அவன் விடைபெற்று சென்றாலும் என் மனதில் உள்ள குழப்பம் மட்டும் இன்னும் மறையவில்லை. எனது பழைய நண்பன் இன்னும் அவனுள் இருக்கிறான்.  இருந்தும் இப்படி ஒரு வாழ்கை ஏன்?

தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லுங்கப்பா.

Advertisements

Comments»

1. top10shares - 09 7, 2008

நல்ல கட்டுரை,

இதில் பாதை மாறியதாக நீங்கள் சொல்வது…

உங்களின் நன்பர் யதார்த்ததிற்கு ஏற்ப வாழ கற்று கொண்டு விட்டார்…

வாழ்க்கையை அப்படியே வாழ கற்று கொள்… என்று படித்தது நினைவிற்கு வருகிறது….

ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்றவர்கள் தான் பேசப்படுகிறார்கள்.

பிரபல நிழல் உலக தாதா தாவுத் குருப்பில் சார்ப் சூட்டர் என்றழைக்க பட்ட பெரோஷ் என்பவர் இருந்தார். மும்பை போலிஸுக்கே சிம்ம சொப்பனமாக இருந்தவன். போலிஸ் காவலில் இருந்து தப்பித்து பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தவன் அங்கு அவனின் கூட்டாளிகளால் கராச்சி தெருவில் சுட்டு கொள்ளபட்டான். அப்போது அவனை பற்றி அதிகம் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளில் அதிகம் பேசப்பட்டது, அவனுடை பள்ளி ஆசிரியை insted of engineer he beome a killer என்று பிரபல ஆங்கில நாளிதழில் அவனை பற்றி எழுதி இருந்தார். அவனது முதல் கொலை ஒரு தொழிற்சங்க தலைவரை ஒரு மீட்டிங் நடந்த சமயத்தில் சுட்டு கொன்றது.. அப்பொழுது 7 வது படிக்கும் மானவன் அவன். மனிதனை சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் தான் வழிநடத்துகின்றன.

2. Ara - 09 8, 2008

பாதை மாறிய நதி சரியான தலைப்பு தான்.

அருண் Page setup ஐ சிறிது கவனிக்கவும்.

3. Share Hunter - 09 8, 2008

Hakuna Matata, Simba.

j

4. simba - 09 8, 2008

//வாழ்க்கையை அப்படியே வாழ கற்று கொள்… என்று படித்தது நினைவிற்கு வருகிறது….//
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை, பெரோஸ் பற்றி நீங்கள் கூறிய பிறகு சில தவல்களை தேடி பார்த்தேன், மிகவும் வியப்பாக உள்ளது சார். தனக்கு இருக்கும் அதே வலி அடுத்தவருக்கும் இருக்கும் என்று ஏன் இவர்களால் உணர்ந்துகொள்ள முடிவதில்லையோ. என்று இவர்களை போல் உள்ளவர்கள் மாறுவார்கள்.??.

Ara …. page setup பற்றி கூறியுள்ளீர்கள் , அது எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று பாருங்கள். அவ்வாறு செய்து விடலாம். ஷேர் ஹன்ட்டர் சார் ரொம்ப சின்னதா எழுதி உள்ளீர்கள். ஆனால் எனக்கு புரியவில்லை. தவறாக எடுத்துகொள்ளாமல் மீண்டும் பின்னூட்டம் இட வரும் பொழுது இதை பற்றி குறிப்படவும்.

5. panguvaniham - 09 8, 2008

ஆக தமிழ் வலையுலகிற்கு புதிய நம்பிக்கையான எழுத்தாளர் கிடைச்சிருக்கார். சரளமான நடை , கலக்குங்க..

வாழ்த்துகள்!

6. simba - 09 9, 2008

இது எனக்கு கிடைத்த மிக பெரும் அங்கீகாரம் சார். உண்மையை சொல்வதென்றால் இப்படி ஒரு உலகம் உள்ளதென்றும், அந்த உலகிற்கு செல்லும் பாதையை காட்டியதும் நீங்கள் தான். எனக்குள்ளும் எழுது தாகம் உருவாவதற்கு அதுவே காரணம். என் நண்பர்களாகிய உங்களுக்கு சகிப்பு தன்மை மிக அதிகம். அதன் வெளிப்பாடே நீங்கள் இட்டுள்ள பின்னூட்டம். சரவணன் சார், உங்களைபோல் பல மலைகள் உள்ள இடத்தில் இன்னமும் நான் வெறும் மண் தான்.

7. Share Hunter - 09 9, 2008

It’s a song in the Lion King. Didn’t u see?

j

8. Ara - 09 9, 2008

அருண் பெரிய அளவில் எதுவும் செய்ய வேண்டியதில்லை. Panguvaniham & Top10shares are looking simple & neat. அதைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உண்மை அருண். வலைகளில் பல அரிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. சமீபத்தில் MGR பற்றிய தகவல்களை charuonline ல் பார்த்தேன்.

http://www.charuonline.com/aug08/mgr.html


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: