jump to navigation

தகதகக்கும் தங்கம் – சில உண்மைகள் 09 5, 2008

Posted by simba in பயனுள்ள தகவல்கள்.
trackback

தங்கநகை வாங்குவோர் கவனத்திற்கு

நமது வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று தங்கம் என்ற உலோகம். அரசன் ஆனாலும் சரி ஆண்டி ஆனாலும் சரி, கடுகளவாவது தங்கம் இல்லாமல் வாழ்வதில்லை.  இந்த அளவு மதிப்பு வாய்ந்த உலோகத்தை வாங்கும் பொழுது இன்று வரை யாரும் முழுமனதுடன் வாங்குவதில்லை. காரணம் தம்மை ஏமாற்றியிருபார்களோ என்ற உணர்வு.

உண்மை … சாமானியர்கள் இன்றுவரை ஏமாற்றப்படுள்ளர்கள்,, அல்லது ஏமாந்துள்ளர்கள்,,  தங்கத்தின் எடையில் அல்ல தரத்தில். இதை தவிர்க்க வழியே இல்லையா. இந்த தொழில் செய்வோர் அனைவரும் இப்படிதானா. கண்டிப்பாக இல்லை.

நகை தொழிலும் பல நல்ல வியாபாரிகள் உள்ளனர். என்ன ஒன்று நல்லவர்கள் விளம்பரப்படுதப்படுவதில்லை. ஆகையால் இங்கே சில கோட்டான்கள் குதித்து விளையாடிக்கொண்டிருகிறார்கள், ஏமாந்தவர்களின் இதயத்தில் ஏறி.

இதற்கான ஒரு சிறு விழிப்புணர்வு முயற்சியே தொடர்ந்து வரும் கட்டுரை. இந்த இடத்தில் இந்த கட்டுரையை எழுதிய நண்பர் திரு.தமிழ் அமுதன் பற்றி குறுப்பிட்டே ஆகா வேண்டும். இவர் தங்க பட்டறை நடத்தி வருகிறார். தனது தொழிலின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக இந்த கட்டுரையை எனது வேண்டுகோளுக்கிணங்க, நமது வலைத்தளத்தில் இடுவதர்க்காக அனுபியுள்ளார். அவரது வேலைகளுக்கு இடையில் சிரமம் பாராமல் அவர் செய்த இந்த உதவிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இனி தங்கம் என்ற உலோகத்தின் உலகத்திற்கு செல்வோம்…

91.6  ……  ஒரு விளக்கம்

91.6 என்பது ஒரு கிராம் ஆபரண தங்கத்தில்  91.6%   சுத்தமான  24  கேரட்  தங்கம் .  மீதி  8.4  சதவீதம்  செம்பு ,மற்றும்  வெள்ளி  ஆகும். 91.6   தங்கம்தான்  22 கேரட்  தங்கம் .

KDM   என்றால்  என்ன ?

முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று  ஒரு கலவையை  பயன் படுத்துவார்கள் . (தங்கம் + வெள்ளி +செம்பு )  இந்த மூன்றும் சேர்ந்ததுதான் பொடி .  இந்த  பொடியை பயன்படுத்தி  நகை பற்றவைக்கும் போது  பொடியில் உள்ள செம்பு , மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன்  சேர்ந்து விடும்  அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும் . ஆனால் KDM வந்த பிறகு அந்த பிரச்சனை  இல்லை . ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் KDM சேர்த்தால்  போதும். பற்றவைக்க இதனை பயன் படுத்தலாம் .பற்றவைக்கும் போது  ஏற்படும் வெப்பத்தில் KDM மட்டும்  தீய்ந்து  போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும்  நகையில் இருக்கும் .

செய்கூலி சேதாரம்

தற்போது கூலி இல்லை ,சேதம் இல்லை என விளம்பரங்கள் வருகின்றன .ஆனால் கூலி இல்லாமல் சேதம் இல்லாமல் தரமான 91.6 kdm நகையை கொடுக்க முடியாது. உதாரணமாக  கல் வைத்த மோதிரம் ஒரு நகை பட்டறையில் எப்படி தயாராகிறது என்று பார்ப்போம்.

  • 1. முதலில் சுத்தமான 24 கேரட் தங்கம், செம்பு மற்றும் வெள்ளி சேர்த்து , 22 கேரட் ஆபரண தங்கமாக மாற்ற படுகிறது
  • 2. மோதிரம்  முதலில் மோல்டிங்  செய்யப்படுகிறது . மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும்  சேதம் கொடுக்க படுகிறது.
  • 3. பின்னர் அளவு தட்டி, ராவி  சுத்தம்  செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் , ராவும் போதும்  சேதம் ஏற்படும் .
  • 4. அடுத்து மோதிரம் பம்பிங்  முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும்.
  • 5. பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க, செதுக்க , நகை செய்பவரால் கூலி ,மற்றும்  சேதம்  கொடுக்க படுகிறது.
  • 6. பின்னர்  நீர் மெருகு போடப்பட்டு  மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.

இப்படி  ஒரு மோதிரம் செய்ய  இவ்வளவு  வேலை இருக்கும் போது  கூலி இல்லாமல் ,சேதம் இல்லாமல்  தரமான       916   KDM   நகை எப்படி கொடுக்க முடியும் .  அப்படியே  கொடுத்தாலும் வேறுவகையில் பிடுங்கி விடுவார்கள்.

ஒரு நகை செய்ய நகையின் தன்மைக்கு ஏற்ப  மூன்று முதல் எட்டு  சதவீதம் வரை  நகை செய்பவருக்கு கொடுக்கப்படுகிறது . இடைத்தரகர்  மூலம்  (  இடைத்தரகருக்கு கமிசன் போக )  மொத்த  வியாபாரிக்கு செல்கிறது . பிறகு  (மொத்த வியாபாரிக்கு கமிசன் போக ) நகை கடைக்கு செல்கிறது . மக்கள் நகை வாங்க செல்லும் போது இடைதரகர் கமிசன் ,மொத்த வியாபாரி கமிசன் எல்லாம்  மக்கள் தலையில் சுமத்தப்படுகிறது.

நகை  வாங்கும்  போது

91.6  KDM    மட்டும்  வாங்கணும்

ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை  ஆயிரம் ரூபாய் எனில் , கூலி  சேதம் வேறு  எல்லாம் சேர்த்து  15 முதல் 20  சதவீதம் அதிகம் கொடுத்து வாங்கினால் அதுவே அதிகம்.

இப்போது  சென்னை, கோவை, மதுரை  போன்ற நகரங்களில்  மக்கள் நேரடியாக தங்கள் நகைகளை வெறும் 25 ரூபாய்  செலவில் தர சோதனை செய்து கொள்ளலாம்.

மிகவும் தரம் உள்ள நகைக்கு  மட்டுமே ஹால் மார்க் போடுவார்கள் .  ஹால் மார்க் என்பது தரத்திற்கான சான்று . ஹால்  மார்க் முத்திரை இடும் நிறுவனம் துவங்க லட்ச கணக்கில் செலவுஆகும்.  ஹால் மார்க் என்றால் 22CT  மட்டும் அல்ல 14CT  ஹால் மார்க் 18CT   ஹால் மார்க்  அப்படி  உள்ளது. மிக மிக சிறிய அளவில் தரம் குறைந்தாலும் ஹால் மார்க்  முத்திரை கிடைக்காது.

22CTகீழ்  உள்ள நகை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் .

ஆனால்14CT,18CT  ஹால் மார்க் முத்திரை பெற்று அதற்குரிய  விலை வாங்கி கொண்டு விற்பனை  செய்யலாம்.

சிறு குறிப்பு:

KDM என்று  சொல்வது  முதலில் தவறு.  CADMIUM என்பதை கேடியம் என சொல்லி KDM  என்று ஆகி விட்டது.

நண்பர்களே நகை வாங்கும் விசயத்தில் ஏமாந்த அப்பாவிகளில் நானும் ஒருவன். கடைசியாக நான் நகை வாங்கியபொழுது எனக்கு திரு. பாலா  மிகவும் உதவியாக இருந்தார். அவரும் ஒரு நகை பட்டறை நடத்தி வருகிறார். எனவே இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் கண்டிப்பாக பின்னுட்டமிட வேண்டுகிறேன். மேலும் இங்கு குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தவிர வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் நமது வலைத்தளத்தில் குறிப்பிடவும் அல்லது நமது நண்பர்கள் தமிழ் அமுதன் , பாலா இவர்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

Advertisements

Comments»

1. top10shares - 09 5, 2008

simply super…. expecting this kind of work from you……..

keep it up….

vazthukkal..

2. Ram - 09 5, 2008

தங்க வியாபாரிகளில் நல்லவர்களும் உள்ளனர் என்பதை உங்கள் கட்டுரையில்
தான் தெரிந்துகொண்டேன். பழமொழி ஒன்று உண்டு.”கால் பவுனிலும் மாபவுன்
எடுத்துவிடுவார்கள்” என்று.
நாம் வாங்கும் பொழுது சேதாரம், கூலி எடுத்துக்கொண்டு பின்னர் விற்கும்பொழுது,விலையை குறைத்து விடுவார்கள்.வாங்கிய கடையில் கொடுத்தாலும்கூட.
“தங்கம் பளிச்சென்று இருக்கும்,விற்பவர்கள் இதயம் பளிச்சென்று இருக்க வேண்டும்.”

3. Sakthi - 09 5, 2008

மிக மிக நன்றி சார். எளிதாக புரிந்தது.

4. Ara - 09 6, 2008

உண்மையிலேயே பயனுள்ள தகவலாக இருக்கிறது. நன்றி.

5. naveen - 09 6, 2008

thanks arun, really good information.

6. S.Kanagavel - 09 6, 2008

I am not interest to wear jewels , anyway this is useful info to purchase for my wife & child.

Pls continue like this type of article.

7. தமிழ் அமுதன் - 09 6, 2008

”தங்க வியாபாரிகளில் நல்லவர்களும் உள்ளனர் என்பதை உங்கள் கட்டுரையில்
தான் தெரிந்துகொண்டேன்”……………நண்பர் திரு ,ராம் அவர்களின் இந்த கருத்து ,மனதில் லேசான ”வலி” ஏற்படுத்துகிறது .—————————நகை தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் நல்லவர்கள் இல்லை .என்று பரவலான கருத்து இருப்பது தெரிகிறது .—————————- ஒரு விஷயம் … நாம் நகை வாங்கும் போது 91.6 KDM மட்டும் கேட்டுவாங்கி தங்கத்தின் மார்கெட் விலை அதற்குமேல் கூலி ,சேதம் (15%-20% ) … நகையை திரும்ப விற்கும் போது நீங்கள் வாங்கும் போது கொடுத்த கூலி ,சேதம் மட்டும்தான் கழிக்கப்பட வேண்டும் .அதுவும் நீங்கள் விற்கும் போது என்ன மார்கெட் விலையோ ? அந்த விலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ன உறுதியை கடை காரரிடம் பெற்று கொள்ளுங்கள் .பணமாக கேட்டால் பணமாக கொடுக்க வேண்டும் என்றும் .கண்டிசன் போடுங்கள் .——————————————- உதரணமாக ஒரு கிராம் ஆயிரம் ரூபாய் எனில் கூலி ,சேதம் சேர்த்து ஒரு நூற்று ஐம்பத்து ஆகலாம் .. நீங்கள் திரும்ப விற்கும் போது அந்த 150RS மட்டும்தான் கழிக்க பட வேண்டும் . அதுவும் அன்றய சந்தை விலை என்னவோ அந்த விலைக்கு எடுத்து கொள்ள வேண்டும் ..——————————————————– இந்த மாதிரி சிக்கல் எதுவும் இல்லாமல் ,நாம் ஏமாற்ற படாமல் இருக்க ஒரு வழி இருக்கிறது . அதாவது நாம் வாங்கும் நகைக்கு பில் போட்டு வாங்குவது .இப்போது சில நகைகடைகளில் போலியான சிறிய பில் கொடுப்பார்கள் அது அல்ல ! அவர்கள் கடை பெயர் அச்சடிக்கப்பட்ட ஒரிஜினல் பில் . அப்படி நாம் பில் வாங்க வரி கட்ட வேண்டும் . அப்படி பில் போட்டு வாங்கிய நகை மயிரிழை அளவு தரம் குறைந்தாலும் ,கடை காரரை ஒருவழி செய்து விடலாம்

8. தமிழ் அமுதன் - 09 6, 2008

”’கால் பவுனில் மாப்பவுன் எடுப்பவர்கள்”’ என்று என்னை பார்த்து நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் . ஆனால் அது எப்படி”’ கால் பவுனில் மாப்பவுன் ” எடுப்பது என்று இன்று வரை தெரிய வில்லை.. ………. மனதில் பட்டதை ” பளிச் ”’ என்று கூறிய நண்பர் திரு ,ராம் அவர்களுக்கு நன்றி !!! நட்புடன் ….தமிழ் அமுதன்

9. SAAJ - 09 6, 2008

தங்க நகை வாங்குபவர்களுக்கான

தங்கமான தகவல்.

நன்றி.

10. Ashok - 09 6, 2008

நண்பரே தங்களுடைய கட்டுரையை படித்தேன். இன்றையசூழலில் தங்கம் வாங்குவது சாமன்யமக்களின் கனவாகவே உள்ளது. இந்த சுழுல்நிழையிலும் தங்கம் வாங்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய உங்களுடைய முயற்சி வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது!!!
நாம் சாதரணமா ஒரு கடையில் பணம் கொடுத்து எதோ ஒரு பொருள் வாங்கும்பொழுது அதனுடைய விற்பனை விலைக்கே வாங்குறோம். அதனுடைய விற்பனை விலையிலே அந்த பொருளுக்கான அனைத்து செலவுகளும் அடக்கம் அப்படியிருக்கும்போது தங்கத்திற்கு மட்டும் தனியாக செய்கூலி,சேதாரம் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?
செய்கூலி சேதாரம் தெளிவான ஒரு விளக்கம் தேவை

11. balakeethai - 09 7, 2008

நண்பர் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்,
உங்களது முயற்சி தினமும் தங்க நகை போல் மெருகேரிவருகிறது,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நண்பர் அமுதன் அவர்களுக்கு
நன்றி….அருமையான விளக்கம் பாமரனும் புரியும்படியான தெளிவு
மேலும் இதை படிக்கும் நண்பர்கள் உண்மையை உணரும் படியான
விளக்கம்.என்னை பொறுத்த வரையில் நம் நாட்டின் விவசாயின்
நிலைமையும் தங்கநகை தொழிலாளர்களின் நிலைமையும் ஒன்னு தான்.
மேலும் இது போன்று உங்களிடம் நிறைய விசயங்களை எதிர்பார்க்கிறோம்

உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

12. balakeethai - 09 7, 2008

நண்பர் திரு. அசோக் அவர்களுக்கு,
நீங்க வாங்கும் ஒரு கிராம் தங்கம் அன்றைய சந்தை நிலவரம் தான்.
இந்த விலை என்பது அசல்.அதனுடைய லாபம் தான் தனியாக சேதாரம்
அந்த சேதாரத்தில் பத்தில் இரண்டு பங்கு அந்த நகையை செய்பவருக்கு.
மீதி லாபம் அதை கைமாற்றுபவர்களுக்கு{இடைத்தரகர்கள் மற்றும் கடை காரர்களுக்கு}இது இந்த நாட்டில் உழைப்பவர்களுக்கு கிடைக்கும் அங்கிகாரம்.
அன்புடன்
பாலா

13. simba - 09 7, 2008

பாலா நீங்க லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்திருக்கீங்க. திரு.அசோக் அவர்கள் கேள்விக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை. மேலும் இந்த தொழிலை விவசாயத்துடன் ஒப்பிட்டது மிகவும் அருமை. ஏன் என்றால் இந்த இரு தொழிலை தவிர மாற்ற தொழில் அனைத்திற்கும் உற்பத்தி விலையை அவர்களே நிர்ணயம் செய்து கொள்கிறார்கள். இலாபம் போதவில்லை என்றால் உற்பத்தியை குறைத்து செயற்கையாக விலையேற்றம் செய்கிறார்கள். தங்கத்தின் விலை வெளிப்படையாக தெரிவதால், அதிக லாபத்திற்கு ஆசைப்படும் சிலர் இவ்வாறு செய்கிறார்கள்.

14. Vimal - 09 7, 2008

கட்டுரை
மிகவும்
அருமை.

நன்றி
மேலும் எழுதுங்கள்

– விமல்

15. panguvaniham - 09 8, 2008

நல்ல முயற்சி…

இந்த பதிவு இன்னமும் நிறைய பேருக்கு போய்ச்சேர வேண்டும்.

16. 09, செப்டம்பர் 2008 « தமிழில் பங்குவணிகம் - 09 9, 2008

[…] பதிவில் இடம்பெற்றிருக்கும் ”தகதகக்கும் தங்கம் – சில உண்மைகள்” என்கிற பதிவு அனைவரும் அறிந்திட […]

17. UMA - 09 9, 2008

REALY SUPER SIR THANKS

18. selvi - 09 9, 2008

super it is useful to us .

19. Basheer - 09 9, 2008

One of my friend brought gold from some one said that he lost his money and everything, i have only my wife bungles this 916. and there is a mark also 916. later my friend chech that, this was only coated. anyboay can engrave the mark 916. or is there any rules?

20. K. Mohanraj, KARUR - 09 9, 2008

முதலில் திரு தமிழ் அமுதன் மற்றும் திரு அருண் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்கம் என்பது இன்றைய நமது வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்து விட்டது என்பது உலகறிந்த விஷயம்.

எனவே அந்த தங்கத்தை வாங்கும் மோகம் பெண்களிடம் காலம் காலமாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்த பாட்டை காணோம்.

ஆனால் பெண்களில் எத்தனை பேருக்கு தங்கத்தை வாங்கும்போது இந்த மாதிரியான விஷயங்கள் தெரியும்? பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் நீங்கள் கூறியுள்ள 91.6 & KDM போன்ற விஷயங்கள் அதிக அளவில் தெரியாமல்தான் இது வரை இருக்கிறார்கள்.

இந்த கட்டுரை அவர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள ஒன்று. திரு தமிழ் அமுதன் அவர்கள் மிகவும் அழகாய் இந்த கட்டுரையை வழங்கியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள்.

அவர் வழங்கிய கட்டுரையை வலைப்பூவில் ஏற்றி நாங்கள் அனைவரும் படிக்க ஒரு வாய்ப்பை வழங்கிய திரு அருண் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

திரு சரவணன் அவர்களின் வலைப்பூவின் மூலமே இந்த கட்டுரையை படிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. திரு சரவணகுமார் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

குறிப்பு:

இது நாள் வரை KDM என்பது எதோ தரத்திற்காக வழங்கப்படும் ஒரு முத்திரை என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். இன்றுதான் அதன் முழு அர்த்தம் எங்களுக்கு தெரிந்தது. மிக்க நன்றி.

21. vigneshkumar - 09 9, 2008

Good job. Excellent.

22. Murugesan - 09 9, 2008

ந்ண்பரே மிகவும் பயனுள்ள தகவல் மிக்க ந்ன்றி,very thanks to bala and amudhan very clearly now i understand that what is KDM & 91.6 very great

Murugesan

23. arun - 09 9, 2008

thank u saravana kumar & amudan

24. தமிழ் அமுதன் - 09 9, 2008

நண்பர் ,திரு பஷிர் அவர்களுக்கு , 91.6 என்று ஒரு நகையில் பொறிக்க பட்டிருந்தால் மட்டும் அது 91.6 ஆகிவிடாது .. 91.6 என்று பொறிக்கப்பட்டு அதைவிட தரம் குறைந்த நகை உங்களுக்கு வழங்கப்பட்டால் .நீங்கள் நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகலாம் .அதற்கு நீங்கள் நகையினை பில் போட்டு வாங்க வேண்டும் . கடந்த வருடம் தினகரனில் வந்த ஒருசெய்தி 2006 வருடம் மட்டும் தரம் குறைந்த நகை வாங்கி ( 91.6 என நினைத்து ) மக்கள் ஏமாந்த தொகை 600 கோடிக்கும் மேல் !!

25. AA - 09 9, 2008

AS you say, KDM is nothing but cadmium which is used for soldering. At present, it has been found that the fumes that emnate during cadmium soldering is harmful to the workmen. Modern jewellers now adays are not using cadmium.

26. Karthik Murugan - 09 10, 2008

Firstly, people should refrain from buying ornaments in Gold. I see gold as an investment option rather than for making jewels. I’d strongly advice to invest in Gold Exchange Traded funds available in markets. Unit price of GETF is equivalent to price of 1 gram gold on that day. No worries about கூலி & சேதம். If you bought gold as a jewel, you would pay 20% extra and at the time of selling you will get only 80% of market price. So where is the profit for you? In case of GETF the entry load is just 2%. Be wise guys.

27. Murugesan - 09 10, 2008

Super

28. இரமணன் - 06 5, 2009

மிகவும் நன்றி இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வழங்கவும்

29. Ravichandran - 05 30, 2010

வேலைப்பாடுகள் குறைந்த தங்க நகைகளை வாங்குவது சிறந்தது ,
கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது,
“ஹால் மார்க் ” முத்திரை இடப்பட்ட தங்க நகைகளை வாங்குவது நம்பிக்கைக்குரியது,

30. Ravichandran - 05 30, 2010

கே.டி.எம் என்பது தரச்சான்று அல்ல, அவை தங்க நகைகளில் பற்ற வைத்தலில் பயன்படுத்தப்படும் ஒரு உலோக கலவையாகும், இது குறைந்த உருகு நிலையில் ஆவியாகி விடுவதால் நகைகளில் தங்குவதில்லை, சேதாரம் ஏற்படுவதில்லை, இதனால் நகை செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் தங்கத்தின் அளவு குறைவதில்லை , தரம் (அதாவது சதவீதம்) மாறுவதில்லை, இதனை ஒரு காரணமாக வைத்து தரத்தில் உயர்ந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதிக விலை வைத்து மக்களை ஏமாற்றுகின்றனர் , நுகர்வோருக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படும் வரையில் ஏமாற்றும் வழிகள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்,

31. விழுப்புரம் ரவிச்சந்திரன் - 06 2, 2010

தங்க நகைகளா போலி நகைகளா என்பதை எவ்வாறு கண்டறிவது ?
தங்க நகைகள் :
பார்வைக்கு ஏற்ற எடை இருக்கும் ,
வேலைப்பாடுகள் நுட்பமாகவும் , இணைப்புகள் தெளிவாகவும் இருக்கும் ,
பார்வைக்கு மங்கலாக தெரியும்,
நகைகளை பயன்படுத்த, பயன்படுத்த , அதன் தன்மை மற்றும் நிறம் மாறாமல் இருக்கும் ,
நாம் பயன்படுத்தும் போது உடலில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாது,
உரை கல்லில் உரசும்போது உரை படியாமல் மங்கலாக தெரியும், இதன் மூலம் தங்கத்தின் தரத்தினை எளிதாக கண்டறியலாம்,
நகைகள் உடலில் உரசும்போது குளிர்ச்சினை ஏற்படுத்தும்,
போலி நகைகள் :
பார்வைக்கு ஏற்ற எடை இருக்காது,
வேலைப்பாடுகள் நுட்பமாகவும் , இணைப்புகள் தெளிவாகவும் இருக்காது,
பார்வைக்கு பளபளப்பாக தெரியும்,
நகைகளை பயன்படுத்த, பயன்படுத்த , அதன் தன்மை மற்றும் நிறம் மாறும், விரைவில் கருத்துவிடும்,
பயன்படுத்தும் போது உடலில் எரிச்சல், ஊரல், காயம், தோல் நிறம் மாறுதல் போன்ற ஒவ்வாமையினை ஏற்படுத்தும்,
உரை கல்லில் உரசும்போது உரை அழுத்தமாக படிந்து பளிச்சென்று தெரியும்,
நகைகள் உடலில் உரசும்போது சூட்டினை ஏற்படுத்தும்,

32. விழுப்புரம் ரவிச்சந்திரன் - 06 2, 2010

தங்க நகைகளை வெல்வெட் துணியாலான பெட்டியில் தனித்தனியாக வைத்து பாதுகாக்க வேண்டும்,
தங்க நகைகளை பயன்படுத்திய பிறகு நீரில் அலசி நன்றாக மெல்லிய துணியால் கவணமாக துடைத்து வைக்க வேண்டும்,
அழுக்கு படிந்த தங்க நகைகளை சோப்பு நீரில் கழுவதைவிட பூந்திகொட்டையில் ஊற வைத்து கழுவினால் நல்லது, ரசயானம் கலக்காமலும்,இதனால் நிறம் மாறாமலும் இருக்கும், கல் நகைகளாக இருப்பின் நீர் மற்றும் எண்ணெய் படாமலும், கல் விழாமலும் கவணமாக பார்த்து கொள்ளவேண்டும்,

33. SATHIS - 07 12, 2010

THANKYOU SIR

34. Manoharan - 11 22, 2010

i understand this articles about gold is very useful for when i m going to buy the gold. need more details about acid property to find the original n duplicate jewels

35. rajaakrishnan - 12 7, 2010

could u pl suggest me how to purchase and sell gold (for investment purpose).

36. pen - 01 19, 2011

its really nice

37. santhosh - 03 2, 2011

sir…… 24 & 18 ket gold la evalavu copper mix pandranga

38. Malar Sam - 04 4, 2011

Hey am a RJ its very useful to my show… really intersting… thk u so much…. kandipa peoples kitta idha solluvan..

39. Ravichandran Tirupur - 05 12, 2011

நண்பர் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்,
உங்களது முயற்சி தினமும் தங்க நகை போல் மெருகேரிவருகிறது,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நண்பர் அமுதன் அவர்களுக்கு
நன்றி….அருமையான விளக்கம் பாமரனும் புரியும்படியான தெளிவு
மேலும் இதை படிக்கும் நண்பர்கள் உண்மையை உணரும் படியான
விளக்கம்.என்னை பொறுத்த வரையில் நம் நாட்டின் விவசாயின்
நிலைமையும் தங்கநகை தொழிலாளர்களின் நிலைமையும் ஒன்னு தான்.
மேலும் இது போன்று உங்களிடம் நிறைய விசயங்களை எதிர்பார்க்கிறோம்

உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

40. s.shanmugam b.sc., - 10 8, 2012

s.shanmugam b.sc.,

thanks to good information …….

41. vijay - 01 7, 2014

dear sir i watch your gold news thank u sir. then sir mother bordil thangam prikka mudiuma sir athil thangam eangu irrukum, eappdi prippathu pattri nan therinthu kollalma sir. pls your information sir thanku.

42. Kannan kutty - 05 28, 2014

எனக்கு, ஒரு சந்தேகம். நாம வங்கும் நகைக்கு செய்குலி ,சேதாரத்துக்கு பணம் தருகிறோம். அப்படி இருக்க அந்த நகையை விற்கும்போது மட்டும் தங்கத்தின் மதிப்புக்கு மட்டும் விற்பது எந்த வகையில் நியாயம்.

43. muthu Krishnan - 09 12, 2015

மிகவும் நன்றி ,தாங்களின் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.

44. Nagesh - 09 23, 2016

22Cdதங்க நகை வாங்களம்மா?

45. த.சிவக்குமார் - 11 1, 2017

மிக்க நன்றி.நான் தங்களை எப்படி தொடர்பு கொள்வது.என்ணுடைய what’s app no:7200441480.தொடர்பு கொள்ளுங்கள்

46. தங்கமணி - 04 14, 2018

பயனுள்ள பதிவு , இத்தோடு பாலா மற்றும் தமிழமுதன் அவர்களின் மின்அஞ்சல் முகவரியையும் குறிப்பிட்டு இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் .

47. Tiviyan - 04 28, 2018

916 தங்கம் என்றால், அது எந்த வகை கேரட் தங்கம், ,,,? Sir


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: