jump to navigation

மத்திய அரசின் இரட்டை வேடம் 09 4, 2008

Posted by simba in News.
trackback

ஒன்னுமே புரியல ஒலகத்துல என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விடும் என்று இப்பொழுது நினைக்க தோன்றுகிறது. காரணம் மத்தியில் ஆளும் அரசின் இரட்டை வேடம். அணுசக்தி ஒப்பந்தத்தில் புதிது புதிதாக உருவாகும் சிக்கல்கள் அல்லது வெளிவரும் உண்மைகள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் பலவித கேள்விகளை எழுப்பியுள்ளன.

தான் நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று ஒரே முடிவுடன் இந்தியாவின் இறையாண்மையை புஷ் அரசிடம் மாண்புமிகு இந்திய பிரதமர் அடகு வைத்து விட்டார் என்றே இப்பொழுது நடைபெறும் அரசியல் விளையாட்டுகள் உணர்த்துகின்றன.

9 மாதங்களாக காக்கப்பட்ட ரகசிய கடிதம் இப்பொழுது வெளியாகி உள்ளது. அதில் “இந்திய அரசு அணுஆயுத சோதனை நடத்துமானால் அடுத்த நொடியே இந்த ஒப்பந்தம் முறிந்துவிடும் ” என்று அதில் குறிபிடபப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நம்மை வியக்க வைத்த விஷயம் ” இந்த தகவல் அனைத்தும் இந்திய அரசிடம் முன்னரே தெரிவித்து விட்டோம். அதன் பிறகு இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படாமல் தடுக்கவே இந்த தகவலை வெளியிடாமல் தாமதித்தோம் ”  என்று  அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கான நாடுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் பெர்மான் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய அரசோ இதை பற்றி வெளிப்படையான கருத்துக்களை இதுவரை வெளியிடவில்லை. அமெரிக்கா நாட்டின் சட்டம் இந்திய அரசை கட்டுப்படுத்தாது. இது வெறும் ஒப்பந்தம் மட்டுமே என இன்று வரை அரைத்த மாவைவே அரைத்துக்கொண்டிருக்கிறது.  இதன் உண்மையான நிலை என்ன இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று நண்பர்கள் உங்களின் பின்னூடங்களை எதிர்பார்கிறேன். .

Advertisements

Comments»

1. balakeethai - 09 4, 2008

இதில் வியப்படைய எதுவும் இல்லை என்று தான் தோனுகிறது,1947 க்கு பிறகு
நாட்டை இவர்கள் ஆண்ட விதம் இது போலத்தான் இருந்திருக்கிறது.தகவல்
வளர்ச்சியின் காரணமாக இந்த விஷயம் சற்று முன்பே தெரிந்து விட்டது…..
அவ்வளவுதான்.இன்னும் சிறிது நாளில் என்னையும் உங்களையும் கூட சத்தமில்லாமல் விற்றலும் விற்ப்பார்கள்…..

நன்றி……
பாலகீதை

2. Ram - 09 4, 2008

அணு ஒப்பந்தம் இந்திய நாட்டிற்க்கு இப்பொழுது தேவையற்றது.
பதினய்ந்து ஆண்டு காலத்திற்க்கு பிறகு கிடைக்க வேண்டிய மின்சாரத்திர்க்காக
இப்பொழுது இந்த ஒப்பந்தம் தேவையற்றது.நாட்டில் ஏனைய பிரச்சனைகள் உள்ள
நிலையில் மத்திய அரசுக்கு தேவையற்ற நிலைப்பாடு இது. பணவீக்கம்,விலைவாசி ஏற்றம்,விவசாயிகள் பிரச்சனை,தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்களின் அத்யாவசிய பிரச்சினைகளைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாகச் செயல்படுகிறது.

இப்படிக்கு,
ராம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: