jump to navigation

09 2, 2008

Posted by simba in சமையல் குறிப்புகள்.
trackback

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்


சுவையான பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி மாவு             :  1/4 கிலோ
  2. சீனி                      :  1/4 கிலோ
  3. தேங்காய் துருவியது      :  1/2 கப்
  4. ஏலக்காய்                 :  3(பொடியாக்கியது)
  5. உப்பு தேவையான அளவு

செய்முறை:
முதலில் பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பின்னர் அவற்றை சிறு சிறு உருண்டைகளாக நீளவாக்கில் உள்ளங்கையில் வைத்து திரட்டிகொள்ளவும். அவற்றை இரண்டு சரி பாதியாக பிரித்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மூன்று தம்ளர் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு துண்டு கொழுக்கட்டையை போட்டு அது கரைகிறதா என்று பார்த்துக்கொள்ளவும். அது கரையவில்லை எனில் பின்னர் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டையின் ஒரு பாகத்தை, கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும். பின்னர் மீதி கொழுக்கட்டையையும் அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும். பின்னர் அது வெந்து விட்டதா என்று பார்க்க கையில் ஒரு துண்டை எடுத்து அழுத்தி பார்க்கவும். வெந்த பதம் வந்தவுடன் அதனுடன் சீனியை சேர்க்கவும். பின்னர் ஐந்து நிமிடம் கழித்து,கெட்டியாக வந்தவுடன் தேங்காய் துருவலையும், ஏலக்காய் பொடியையும் தூவி இறக்கி வைத்து விடவும்.

இப்போது சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

நன்றி :திருமதி. இராஜலக்ஷ்மி இராமசாமி – சென்னை

Advertisements

Comments»

1. Ara - 09 2, 2008

நல்ல முயற்சி அருண். தொடர்ந்து நல்ல தகவல்களை அளிக்கவும்.

2. simba - 09 2, 2008

நன்றி திரு.Ara. இது எனது தனிப்பட்ட முயற்சி இல்லை. நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் தளமாகவே இது அமைய வேண்டும்.

3. Ara - 09 2, 2008

நன்று அருண். தாங்கள் இவ்வலைப்பக்கங்களை தொடர்ந்து மேம்படுத்த எனது வாழ்த்துக்கள்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: