jump to navigation

08 28, 2008

Posted by simba in News.
trackback

புதுச்சேரி புதிய முதல்வராக வைத்தியலிங்கம் தேர்வு

புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி இன்று பதவி விலகிய நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வராக     வைத்தியலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. ரங்கசாமிக்கு எதிராக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி ஆரம்பித்தனர். ரங்கசாமியை மாற்றும்படி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர்.

இதன் காரணமாக, தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ரங்கசாமிக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ரங்கசாமிக்கு எதிராக இருந்ததால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால், முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி இன்று விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஆளுனர் கோவித் சிங் குர்ஷரிடம் வழங்கினார்.

.

சிங்கூர் நானோ கார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மிரட்டல்

மேற்கு வங்கம் சிங்கூரில் இருக்கும் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை முன்பு கடந்த 24 ம் தேதியில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் இன்று அங்குள்ள தொழிலாளர்கள் மிரட்டப்பட்டதாக தெரிகிறது. இதனால் அனேகமாக அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் டாடா மோட்டார்ஸ் ஊழியர்கள் மிரட்டப்பட்டதால் அதில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தவர்கள் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே வந்திருந்தனர். எனவே இன்று உற்பத்தி அனேகமாக நிறுத்தப்பட்டு விட்டது என்று சொல்கிறார்கள்.

நானோ கார் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்திற்கு முகேஷ் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது

பெரியகலையம்புத்தூர் வள்ளுவர் தெருவில் திருவள்ளுவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கோயில் கட்டப்பட்டுள்ளது. 10 மாதங்களுக்கு முன் இந்த கோயிலின் கட்டுமான பணிகள் துவங்கியது . இங்கு 4.5 அடி உயரமுள்ள கல்லால் ஆன திருவள்ளுவர் சிலை ஸ்தாபிக்கப்பட உள்ளது.ஒரு அடி உயரத்தில் பீடம் உள்ளது. வரும் 30ம் தேதி காலை 5 மணிக்குமேல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Comments»

No comments yet — be the first.

Leave a comment